தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு இரு மடங்காக உயர்கிறது

இந்திய பணிக்கொடை சட்டப்படி, முறைசார் துறைகளில் 5 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் பணியாற்றி விட்டு விலகினாலோ அல்லது பணி ஓய்வின் போதோ தொழிலாளி ஒருவர் ரூ.10 லட்சம் வரை வரியில்லா பணிக்கொடை பெற முடியும். #Gratuity
தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு இரு மடங்காக உயர்கிறது
Published on

புதுடெல்லி,

பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பணிக்கொடை திருத்த மசோதா என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு இந்த மசோதா கடந்த 15ந் தேதி நிறைவேறியது.

இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்று மத்திய தொழிலாளர்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டும் என ஏராளமான உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேட்டுக்கொண்டனர். அதன்படி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம், தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்கிறது. மேலும் பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பை, பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com