உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் கொண்டாடியது ஏன்? - பரூக் அப்துல்லா தகவல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் கொண்டாடியது ஏன் என பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் கொண்டாடியது ஏன்? - பரூக் அப்துல்லா தகவல்
Published on

ஜம்மு,

துபாயில் நடந்து வருகிற 20 ஓவர் உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இது நாடு முழுவதும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் வெற்றியை ஜம்மு காஷ்மீரில் சிலர் கொண்டாடி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதன் பின்னணி குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா நேற்று கூறுகையில், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களுக்கு, உள்நோக்கம் எதுவும் இல்லை. அதை கொண்டாடியவர்கள் குழந்தைகள், இளைஞர்கள். எங்களிடம் இருந்து அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ-யை பா.ஜ.க.வினர் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு எரிச்சல் ஏற்படுத்தத்தான் இப்படி நடந்து கொண்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com