

புதுடெல்லி,
நாட்டில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் அமைப்பு உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், சீரம் இன்ஸ்டியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனாவுக்கு எதிரான நம்முடைய போரில் மற்றொரு மைல்கல். கோவோவாக்சை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. நோவோவாக்ஸ், உலக சுகாதார அமைப்பு, கவிசேத், கவி, கேட்ஸ் பவுண்டேசன் ஆகிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட மற்றொரு செய்தியில், அவசரகல பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியான கோவோவாக்ஸ், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது. அது சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.