உலக பாரம்பரிய தினம்: 19-ம் தேதி தாஜ்மகாலை பார்வையிட இலவசம்

தாஜ்மஹாலின் பிரதான கல்லறைப் பகுதிக்குள் செல்ல பார்வையாளர்கள் வழக்கம் போல ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19-ம் தேதி தாஜ்மகாலை பார்வையிட இலவசம்
Published on: 

புதுடெல்லி,

உலக பாரம்பரிய வாரத்தின் தொடக்க நாளான நவம்பர் 19ம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் பதேபூர்சிக்ரி உள்ளிட்ட மத்திய அரசால் பாதுகாக்கப்படும் அனைத்து நினைவுச்சின்னங்களுக்கும் சுற்றுலாப்பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரிய வாரம் வரும் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

பாரம்பரிய சின்னங்களைப்பாதுகாப்பதை ஊக்குவிக்கும் வகையில், இந்த வாரத்தின்முதல்நாளில் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசால் பாதுகாக்கப்படும் அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை இந்தியதொல்லியல் துறை ரத்து செய்துள்ளது.

இது குறித்து இந்திய தொல்லியல்துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் ஸ்மிதாகுமார் கூறுகையில், நவம்பர் 19ம் தேதி உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் ஆக்ராவில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்களையும் கட்டணமின்றிப் பார்வையிடலாம் என்றார்.

இருப்பினும், தாஜ்மஹாலின் பிரதான கல்லறைப் பகுதிக்குள் செல்ல பார்வையாளர்கள் வழக்கம் போல ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாரம்பரிய வாரத்தை முன்னி ட் டு நினைவுச் சின்னங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாகவும் ஸ்மிதாகுமார் தெரிவித்தார்.

இதனிடையே,தாஜ்மஹால் வளாகத்தில் கண்காணிப்பு இல்லாத மறைவான இடங்களில் 360 டிகிரி

கோணத்தில் சுழலும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுபாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுற்றுலா வழி காட்டிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

X