நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, மழைநீரை வைத்து நாடு சமாளிப்பது சிறந்தது- பிரதமர் மோடி

நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, மழைநீரை வைத்து நாடு சமாளிப்பது சிறந்தது என மழை நீரை சேகரிப்போம் என்ற பிரசாரத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, மழைநீரை வைத்து நாடு சமாளிப்பது சிறந்தது- பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

உலக நீர் தினத்தையொட்டி, ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழை நீரை சேகரிப்போம் என்ற பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். ராஜஸ்தான், உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டு தலைவர்ளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் அதே நேரத்தில் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்தியா சுயசார்பை எட்டுவது நமக்கு கிடைக்கும் நீரின் அளவை பொறுத்து இருக்கும் . எனவே தான் மத்திய அரசு நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய வளர்ச்சியின் தொலைநோக்கு திட்டம் மற்றும் இந்தியாவின் தன்னம்பிக்கை ஆகியவை நமது நீர் வளங்கள் மற்றும் நீர் இணைப்பை சார்ந்து உள்ளன.

நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, மழைநீரை வைத்து நாடு சமாளிப்பது சிறந்தது. ஜல் ஜீவன் திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும் ஏனெனில் அவர்களை விட அதன் மதிப்பை யாரும் நன்றாக புரிந்து கொண்டதில்லை.மழை நீரை அதிக அளவு சேகரித்தால், நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமையை மாற்றலாம்.தண்ணீருக்கு மதிப்பளிக்கும் வகையில் நமது இயற்கை மாறும்போது, இயற்கையும் நமக்கு உதவும்

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நீர் சோதனைக்காக ஒரு அரசு இவ்வளவு தீவிரமாக பணியாற்றி உள்ளது. கொரோனாவின் போது (மழை) நீர் சோதனைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர்.

குஜராத், ராஜஸ்தான் மக்கள் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும், தண்ணீர் பரிசோதனை குறித்த பயிற்சி பெற்ற பெண்கள் 5 பேர் உள்ளனர்.

நானும் குஜராத்தைச் சேர்ந்தவன், இதுபோன்ற பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன். அதனால்தான் மத்திய நீர் அமைச்சகத்தில், இதுபோன்ற பிரச்சினைகளைக் கொண்ட பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டில் உள்ள 19 கோடி கிராம குடும்பங்களில் 3.5 கோடி குடும்பங்கள் மட்டும் குடிநீர் குழாய் இணைப்பை பெற்றிருந்தன.ல் ஜீவன் திட்டம் தொடங்கியபின், குறுகிய காலத்தில் 4 கோடி புதிய குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com