உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திர முதல்-மந்திரி திறந்து வைத்தார்

இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திர முதல்-மந்திரி திறந்து வைத்தார்
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com