லடாக்கில் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி

உலகின் மிகப்பெரிய கதர் துணியிலான தேசியக்கொடி லடாக்கில் நிறுவப்பட்டது.
லடாக்கில் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி
Published on

லே(லடாக்),

உலகின் மிகப்பெரிய கதர் துணியிலான தேசியக்கொடி லடாக்கில் உள்ள லே நகரில் நிறுவப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்டன.இன்று காலை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், ராணுவ முதன்மை தளபதி மனோஜ் முகுந்த் நரவணே ஆகியோர் பங்கேற்றனர்.

லடாக்கில் நிறுவப்பட்ட தேசியக் கொடி 225 அடி நீளமும் 150 அடி அகலமும் உடையது. இதன் எடை 1000 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com