நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 12.54 சதவீதமாக உயர்வு!

நாட்டின் மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம் 12.54 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 12.54 சதவீதமாக உயர்வு!
Published on

புதுடெல்லி,

எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் தயாரிப்பு சாதனங்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக, அக்டோபர் மாதத்துக்கான நாட்டின் மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம் 12.54 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

கடந்த 5 மாதங்களாக சரிவைச் சந்தித்து வந்த மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென உயர்ந்துள்ளது.மினரல் எண்ணெய், அடிப்படை உலோகங்கள், உணவு சாதனங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு , வேதிப்பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக இந்த உயர்வு நிகழ்ந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 24.8ஆக இருந்து வந்த நாட்டின் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 37.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெயின் விலை உயர்வு செப்டம்பர் மாதத்தில் 71.86ஆக இருந்து வந்த நிலையில், அக்டோபர் மாதம் அது 80.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக பிற பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

மேலும், சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.48 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும், மறுமுனையில் தீபாவளியன்று, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூபாய் 5 மற்றும் ரூபாய் 10 குறைத்து அறிவித்தது. இதன்காரணமாக, பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com