பா.ஜனதாவுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர் பிரசாரம் - தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார்

பா.ஜனதாவுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர் பிரசாரம் செய்வது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
பா.ஜனதாவுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர் பிரசாரம் - தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார்
Published on

கொல்கத்தா,

தி கிரேட் காளி என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா. தற்போது இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் இங்கு வந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது.

அதில், தி கிரேட் காளி அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார். அவரது பிரபலத்தை பயன்படுத்தி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இந்தியாவில் யார் ஒரு பொருத்தமான எம்.பி.யாக இருக்க முடியும் என்பது பற்றி முழுமையாக தெரியாத ஒருவர் இந்திய வாக்காளர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துதற்கு அனுமதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

இந்த புகார், மேற்கு வங்காள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 26-ந் தேதி, ஜாதவ்பூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுடன் தி கிரேட் காளியும் சேர்ந்து பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தி கிரேட் காளி அளித்த பேட்டியில், என்னை எப்போது அழைத்தாலும் நான் வருவேன். அமெரிக்காவில் இருந்து என் தம்பிக்கு ஆதரவு தர வந்துள்ளேன். உங்கள் ஓட்டுகளை வீணடிக்காதீர்கள். அனுபம், படித்தவர். உங்கள் கஷ்டங்கள் தெரிந்தவர். மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com