ஹரித்துவாரில் இருந்து சோகத்துடன் வீடு திரும்பிய மல்யுத்த வீராங்கனைகள்

ஹரித்துவாரில் இருந்து சோகத்துடன் மல்யுத்த வீராங்கனைகள் வீடு திரும்பினர்.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக கூறி நேற்று முன்தினம் ஹரித்துவார் சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அங்கு விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத்தால் தடுத்து சமாதானம் செய்யப்பட்டனர்.

அதையடுத்து அவர்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதை கைவிட்டனர்.

அதன்பிறகு ஊடகங்களிடம் பேசாமல் மவுனமாக, சோகத்துடன் அவரவர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'மல்யுத்த வீரர், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை மவுன விரதம் இருந்ததால்தான் ஹரித்துவாரில் யாரிடமும் பேசவில்லை.

அவர்கள் நேற்று காலை வரை அழுதுகொண்டே இருந்தனர். மாவட்ட அளவில் வென்ற பதக்கத்தையே தூக்கி எறிந்துவிட முடியாது என்கிறபோது, சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை அவர்கள் நதியில் வீச வந்துவிட்டனர். அதிர்ச்சியில் இருந்ததால் அவர்கள் வாயில் இருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை.

தற்போது சாக்ஷி மாலிக் மட்டும் டெல்லியில் தங்கியிருக்கிறார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் அரியானாவில் உள்ள தங்களது வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com