எக்ஸ் சமூக ஊடகத்தில் உலக தலைவர்களில் அதிக பாலோயர்கள்... பிரதமர் மோடி சாதனை

உலகளவில் முன்னணியில் உள்ள சில விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்களுடன் ஒப்பிடும்போதும் பிரதமர் மோடி அதிக பாலோயர்களை கொண்டுள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் உலக தலைவர்களில் அதிக பாலோயர்கள்... பிரதமர் மோடி சாதனை
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் என பல்வேறு வகையான விசயங்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அந்த தளங்கள் பயன்பட்டு வருகின்றன.

இவற்றில் எக்ஸ் சமூக ஊடகமும் ஒன்று. இதில், பிரதமர் மோடி அதிக அளவிலான பாலோயர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார். வேறு எந்த இந்திய அரசியல்வாதியையும் விட அவர் அதிக எண்ணிக்கையிலான பாலோயர்களை கொண்டுள்ளார்.

அவர் 10 கோடி பாலோயர்கள் என்ற எண்ணிக்கையை கடந்திருக்கிறார். இதற்காக தன்னுடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.

இந்த வரிசையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு 2.64 கோடி பாலோயர்கள் உள்ளனர். டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் (2.75 கோடி பாலோயர்கள்), அகிலேஷ் யாதவ் (1.99 கோடி பாலோயர்கள்) மற்றும் மம்தா பானர்ஜி (74 லட்சம் பாலோயர்கள்) ஆகியோர் பிரதமர் மோடியை விட பின்தங்கியுள்ளனர்.

உலக தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் (3.81 கோடி பாலோயர்கள்), துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது (1.12 கோடி பாலோயர்கள்) மற்றும் போப் பிரான்சிஸ் (1.85 கோடி பாலோயர்கள்) ஆகியோரை விடவும் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.

உலகளவில் முன்னணியில் உள்ள சில விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்களுடன் ஒப்பிடும்போதும் அவர் அதிக பாலோயர்களை கொண்டுள்ளார்.

விராட் கோலி (6.41 கோடி பாலோயர்கள்), பிரேசில கால்பந்து வீரர் நெய்மர் (6.36 கோடி பாலோயர்கள்) மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (5.29 கோடி பாலோயர்கள்) ஆகிய விளையாட்டு வீரர்களை விடவும், டெய்லர் ஸ்விப்ட் (9.53 கோடி பாலோயர்கள்), லேடி ககா (8.31 கோடி பாலோயர்கள்) மற்றும் கிம் கர்தேஷியன் (7.52 கோடி பாலோயர்கள்) ஆகிய திரை பிரபலங்களை விடவும் அவர் அதிக பாலோயர்களை கொண்டிருக்கிறார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில் 3 ஆண்டுகளில் 3 கோடி பயனாளர்கள் என அவர் அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளார். இதுதவிர அவர், யூடியூபில் 2.5 கோடி சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் 9.1 கோடி பாலோயர்களையும் கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com