மே.வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் அதிரடி

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் 12 வீரர்கள் அடங்கிய ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிவடைந்து கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு போன்ற பிற காரணங்களால், 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்னர். இதைத்தொடர்ந்து ஜனவரி 15-ந் தேதி வரை, வாக்காளர் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான கோரிக்கைகள் பெறப்பட உள்ளன. இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த. பணிகளை கவனித்து வரும் மேற்கு வங்காள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அவருக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் 12 வீரர்கள் அடங்கிய ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை கையாள்வதே பெரும் தலைவலியாக அந்த நாட்டிற்கு இருக்க கூடிய சூழலில், புது பிரச்சினையாக அந்த நாட்டில் காண்டம்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் தொகை அதிகரித்து வரும் வங்கதேசத்தில், கருத்தடை சாதனங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.






