முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
Published on

பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. எடியூரப்பாவே எங்கள் தலைவர். தான் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்று அவர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கூறியுள்ளார். முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தொண்டர்கள் அடிப்படையில் இயங்கும் கட்சி பா.ஜனதா. கட்சியே முக்கியம் என்று எடியூரப்பா கூறியுள்ளார். எங்கள் கட்சியில் சில தலைவர்களை எடியூரப்பா உருவாக்கியுள்ளார். அதனால், தான் கட்சியில் மாற்று தலைவர்கள் இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com