ரூ. 300 கோடி மோசடி வழக்கு: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

வங்கி மோசடி வழக்கில் கைதாகியுள்ள மு யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது
ரூ. 300 கோடி மோசடி வழக்கு: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்
Published on

மும்பை,

மும்பையை தலைமையகமாக கொண்டு 2004-ம் ஆண்டு யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளில் இந்த வங்கியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக வளர்த்தெடுத்தவர், அதன் நிறுவனர் ராணா கபூர்

இந்த வங்கியில், கடந்த 2020-ம் ஆண்டு ரூ.4,300 கோடி அளவுக்கு நடந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றது.

இந்நிலையில், தவறான வகையில் ரூ. 300 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகியுள்ள ராணா கபூர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம், ராணா கபூருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ 5 லட்சம் பிணைத்தொகை வழங்க வேண்டும் என்பதோடு பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com