தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு

மூன்று முறை கவர்னரை விஜய் சந்தித்து விட்ட நிலையில் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை
தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு
Published on

புதுடெல்லி:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சி ஆட்சி அமைக்க கோரி கவர்னரிடம் கடிதம் அளித்த பின்பும் கவர்னர் அக்கட்சித் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை மாறாக பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தவெகவைச் சேர்ந்த எழிலரசி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட்மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை கவர்னர் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

இது தொடர்பாக உரிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இதே கோரிக்கையை வைத்து மேலும் ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com