யோகா, உலகை ஒன்றாக இணைக்கிறது; பசவராஜ் பொம்மை பேச்சு

யோகா, உலகை ஒன்றாக இணைக்கிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மைசூரு அரண்மனையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை யோகாசனம் செய்த காட்சி.
மைசூரு அரண்மனையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை யோகாசனம் செய்த காட்சி.
Published on

பெங்களூரு:

மத்திய அரசு சார்பில் சர்வதேச யோகா தின விழா மைசூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவுக்கு சேர்ந்த யோகாவை உலக அளவில் கொண்டு சென்றதில் பிரதமர் மோடிக்கு பெரிய பங்கு உள்ளது. மைசூருவில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இதன் மூலம் மைசூரு உலக அளவில் பேசப்பட்டுள்ளது. யோகா உடல் மற்றும் ஆத்மாவை ஒருங்கிணைக்கிறது. இது உலகை ஒன்றாக இணைக்கிறது. இது நல்ல உடல் சுகாதாரத்தையும், நல்ல குணத்தை ஏற்படுத்துகிறது. நமது நாடு நல்ல வரலாற்றை கொண்டுள்ளது. ஆனால் நல்ல குணம் வேண்டும். அந்த நல்ல குணத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com