‘இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது’ - பிரதமர் மோடி

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது’ - பிரதமர் மோடி
Published on: 

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பெங்களூரு சென்றுள்ளார். தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

யோகா

“இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான நுழைவு வாயிலாக யோகா விளங்குகிறது. இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும், மதிய மற்றும் இரவு உணவின்போது மக்கள் என்னுடன் யோகாவைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

யோகாவின் ஆற்றல்

பெங்களூரு நகரத்தில் யோகாவின் அற்புதமான ஆற்றலை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. யோகாவுடன் தொடர்புடைய பல ஆசிரியர்களும் அறிஞர்களும் கர்நாடகாவில்தான் பிறந்தனர். மறைந்த, புகழ்பெற்ற கன்னட நட்சத்திர நடிகரான டாக்டர் ராஜ்குமார் ஒரு யோகா பயிற்சியாளராக இருந்தார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X