பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரை இன்று சந்தித்து பேசுகிறார்.
பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அவர் நேற்று டெல்லி சென்றார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன்பின்பு, பிரதமர் மோடியை எண் 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10.45 மணியளவில் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசுகிறார். அதன்பின், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நண்பகல் 12 மணியளவில் சந்தித்து பேச இருக்கிறார்.

வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பா.ஜ.க. அரசின் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட கூடும் என்றும் யூகங்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com