உத்தரபிரதேச சட்டமேலவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் போட்டி

உத்தரபிரதேச சட்டமேலவை தேர்தலில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.
உத்தரபிரதேச சட்டமேலவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் போட்டி
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்- மந்திரியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்.

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரிகள், கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, மந்திரிகளாக இருக்கும் சுவதந்திரா தேவி, மோஷின் ராஜா ஆகியோர் பாஜக சார்பில் உத்தரபிரதேச சட்டமேலவை தேர்தலில் போட்டியிட உள்ளனர். சட்டமேலவைக்கு செப்டம்பர் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக 6 மாதத்திற்குள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதனால் சட்டமேலவை தேர்தலில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.

யோகி ஆதித்யநாத் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5-வது முறையாக எம்.பி.யாக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com