யோகி ஆதித்யநாத் பிறந்த நாள்; 54 கிலோ கேக் வெட்டி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகி ஆதித்யநாத் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.
லட்டு கேக்
Published on

உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதிதய்நாத் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் வாரணாசியில் 54 கிலோ எடையுள்ள லட்டு கேக்கை வெட்டி கொண்டாடினர். வாரணாசியில் உள்ள 51 அடி உயரம் கொண்ட வரத ஆஞ்சநேயர் அனுமன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு முதல்-மந்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மரக்கன்றுகள்

யோகி ஆதித்யநாத்தின் 54-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 54 கிலோ லட்டு கேக் தயாரிக்கப்பட்டு வெட்டப்பட்டது. மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 54 மரக்கன்றுகளும் நடப்பட்டன.நிகழ்ச்சியின் போது, உத்தரப் பிரதேச அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மாநில வளர்ச்சி பணிகளை விளக்கும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

சிறப்பு பூஜை

இதையடுத்து சிறப்பு பூஜை மற்றும் ஆரத்தி நடைபெற்றது. யோகி ஆதித்யநாத் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து மாநிலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என ஆதரவாளர்கள் வேண்டினர். யோகி ஆதித்யநாத் கடந்த 1972-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி உத்தரபிரதேசத்தின் பவுரி கர்வால் கிராமத்தில் பிறந்தார்.

தலைவர்கள் வாழ்த்து

யோகி ஆதித்யநாத் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கவை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சியிலும் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் பொதுச்சேவையில் மேலும் சிறந்து விளங்க பிறந்த நாளான இன்று வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com