

லக்னோ
உத்தரபிரதேச மாவட்டம் சஹவார் தெஹ்ஸில் உள்ள பரவுலி கிராமத்தில் பாரதீய ஜனதாவைச் ஏர்ந்த 3 தொண்டர்கல் கொலை செய்யபட்டனர். அவர்கள் வீட்டாருக்கு ஆறுதல் கூற முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார்.
அவர் சென்ற ஹெலிகாப்டர் காந்தி வித்யாலயாவில் தயார் செய்யபட்டு இருந்த தற்காலிக ஹெலிபேடில் இறங்க வேண்டும் ஆனால் கோளாறு காரணமாக சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வயல் வெளியில் ஹெலிகாப்டர் இறங்கி உள்ளது.
முதல்வர் பாதுகாப்பாக இருப்பதாகவும் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் பிரதம செயலாளர் (உள்துறை) அரவிந்த் குமார் லக்னோவில் தெரிவித்தார்.