பாம்பை கூட நம்பலாம்: பாஜகவை நம்ப முடியாது: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்திலும் வெளியிலிருந்து ஆட்களை கொண்டு வரும் அதே தந்திரத்தை பாஜக பயன்படுத்த முயற்சிக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
பாம்பை கூட நம்பலாம்: பாஜகவை நம்ப முடியாது: மம்தா பானர்ஜி
Published on

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் இந்தியாவில் உள்ள எந்தவொரு அமைப்பும் நடுநிலையுடன் செயல்படவில்லை.

அந்த கட்சி அனைத்தையும் விலைக்கு வாங்கிவிட்டது.உத்தரபிரதேசத்தில் இருந்து ஒரு ரெயில் நிறைய 50 ஆயிரம் ஆட்கள் அசாம் தேர்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு வங்காளத்திலும் வெளியிலிருந்து ஆட்களை கொண்டு வரும் அதே தந்திரத்தை பாஜக பயன்படுத்த முயற்சிக்கிறது.

அதனால்தான் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.பாம்பை கூட நம்பலாம், பா.ஜனதாவை நம்பவே முடியாது. வெளியில் இருந்து இங்கு ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். பணம், போதை பொருள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் எங்கள் கட்சியினர் அதை வீழ்த்தி வெற்றி பெறுவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com