உ.பியில் குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்; யோகி ஆதித்யநாத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

உத்தர பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடந்திருந்தாலும், இந்தத் தேர்தல் தனித்துவமானது என பிரதமர் மோடி காணொலி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உ.பியில் குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்; யோகி ஆதித்யநாத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

லக்னோ,

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:-

கிரிமினல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். உத்த பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சியை யோகி ஆதித்யநாத் நிலை நிறுத்தியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டில் உத்தர பிரதேசம் தொடர்ந்து இரு மடங்கு வேகத்துடன் பணியாற்ற வேண்டும். இரட்டை என் ஜின் அரசாங்கத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.

ஒட்டு மொத்த உலகமும் தற்போது பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நெருக்கடியை மனிதர்கள் கண்டதில்லை. இத்தகைய பெருந்தொற்று காலத்திலும் கூட இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் இரு மடங்கு பலன்களை கண்டோம்.

எதிர்க்கட்சிகள் தடுப்பூசிகள் குறித்து வதந்திகளை பரப்பின. ஆனாலும், அவற்றை புறந்தள்ளிவிட்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வாக்குகளை செலுத்தும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் சமாஜ்வாடியினருக்கு வாய்ப்பு கிடைத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும். உங்களை பட்டினி நிலைக்கு சமாஜ்வாடியினர் தள்ளிவிடுவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com