சாலையில் நடந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாலையில் நடந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சி அரசு சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், மணலி முக்கு-தேவக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து வந்தார். ஆள் நடமாட்டம் இல் லாத போது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, மாணவி முன்பு அந்த வாலிபர் நிர் வாணமாக நின்றதாக தெரிகிறது. அத்துடன் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கி ருந்து தப்பி ஓடி அருகே இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதுகுறித்து சட்டக்கல்லூரி மாணவி எடத்தலா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதோடு கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாவட் டம் மூவாட்டுப்புழா அருகே ஆணிக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின் ராஜீவ் (வயது 22) என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com