பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; சுட்டு பிடித்த போலீசார்


பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; சுட்டு பிடித்த போலீசார்
x

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரிடம் இருந்து கைத்துப்பாக்கி, நம்பர் பிளேட் இல்லாத பைக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

பரேலி,

உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் இஜாத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக பள்ளி மாணவி ஒருவர் காலை நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் பைக்கில் இருந்தபடி திரும்பி மாணவியை பார்த்துள்ளார். அது ஆளில்லா பகுதி என தெரிந்ததும், பைக்கை திருப்பி கொண்டு வந்துள்ளார். அப்போது கார் அருகே நடந்து சென்ற அந்த மாணவியிடம், திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். மாணவியின் அந்தரங்க பகுதிகளை தொட்டு துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பள்ளி மாணவி, சாலையில் நின்றபடி பயத்தில் கத்தி, கூச்சலிட்டார். ஆனால், ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அந்த மாணவியை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு இளைஞர் தப்பி விட்டார்.

அந்த மாணவி வீட்டுக்கு திரும்பி நடந்த விசயங்களை கூறி அழுதுள்ளார். இதுபற்றி போலீசில் மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறப்பு படை அமைத்து, போலீஸ் சூப்பிரெண்டு அனுராக் ஆர்யா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சி.சி.டி.வி. உதவியுடன் அந்நபரை போலீசார் கண்டறிந்தனர். அவர் முஸ்பீர் (வயது 22) என அடையாளம் காணப்பட்டது. அவருடைய பைக்கின் எண்ணை வைத்து குற்றவாளியை கண்டறிந்தனர். இதன்பின், கர்மசாரி நகர் சவுகி பகுதியில், தோட்ட பகுதியில் பதுங்கி இருந்த முஸ்பீரை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால், அவர் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட முயன்றார்.

இதனால், தற்காப்புக்காக அவரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். முகமது ரெயிஸ் என்பவரின் மகனான முஸாபீர், இஜாத்நகரில் கமல் நாயன்பூர் பகுதியில் வசித்து வருகிறார். முகமது பால் விற்பனை செய்து வருகிறார்.

முஸாபீரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், நம்பர் பிளேட் இல்லாத பைக் ஒன்று ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story