லிப்ட் கொடுப்பதாக பள்ளி மாணவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்

கொலை செய்து விடுவதாக மிரட்டி மாணவியை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
லிப்ட் கொடுப்பதாக பள்ளி மாணவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற வாலிபர் தனது மோட்டார்சைக்கிளில் வந்து மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். அவரை நம்பி மாணவி மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

ஆனால், மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். வழியில் மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டதும், ஓடும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த ராகேஷ் மாணவியை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மாணவியை ராகேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை மோட்டார்சைக்கிளில் ஏற்றி சென்று மாணவியை அவரின் வீட்டில் விட்டு விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து நாயுடுப்பேட்டை போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான வாலிபர் ராகேஷை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com