

புவனேஷ்வர்,
ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரெயில் விபத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.
இதுகுறித்து கட்டாக் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருத்துவர் ஒருவர் கூறும்போது; ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய அதிக இளைஞர்கள் வருகை தந்தனர்.
இளைஞர்களிடம் இருந்து மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்தனர். கட்டாக், பாலசோர் மற்றும் பத்ரக் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் 3000 யூனிட்களுக்கு மேல் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.