பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே போட்டுச்சென்ற இளம்பெண்

பிரசவித்த குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே போட்டுச்சென்ற இளம்பெண்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியை சேர்ந்தவர் ஷாகினா (வயது 28). இவர் 16 நாட்களுக்கு முன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த மற்றொரு பெண்ணிடம், குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை. இதனால் குழந்தையை அந்த பெண் உடனே ஆஸ்பத்திரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து பெண் குழந்தையை போலீசார் மீட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி தாய்-சேய் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் நடத்திய பின் குழந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த குழந்தை குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பெண்ணிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழந்தையின் தாயார் மருத்துவமனையில் பதிவு செய்து இருந்த போன் நம்பரை தொடர்பு கொள்ள முயன்ற போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரியில் பிரசவித்த குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? எதற்காக குழந்தையை விட்டு சென்றார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com