திருமண நிகழ்வில் நடனமாடிய இளம்பெண் மாரடைப்பால் பலி

பாடல் ஒன்றுக்கு நடனமாடிய போது திடீரென கீழே சுருண்டு விழுந்தார்.
திருமண நிகழ்வில் நடனமாடிய இளம்பெண் மாரடைப்பால் பலி
Published on

போபால்,

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த பிரனித்தா ஜெய்ன் என்பவர் தனது சகோதரியின் திருமணத்தையொட்டி மேடையில் பாடல் ஒன்றுக்கு நடனமாடினார். அப்போது திடீரென மயங்கி கீழே சுருண்டு விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரனித்தாவை சோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தார். பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com