

நகரி,-
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா நகரியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஊருக்கு நியாயம் பேசும் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அவரது கட்சியில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு, கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.