பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி காரில் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் - இருவர் கைது


பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி காரில் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் - இருவர் கைது
x

சோதனைச் சாவடியில் இருந்த போலீசாரிடம் இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார்.

அகர்தலா,

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது பக்கத்துவீட்டுக்காரர்களான 2 இளைஞர்களுடன் அருகில் உள்ள கோவிலுக்கு காரில் ஏறிச் சென்றுள்ளார். கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, இளைஞர்கள் அந்த பெண்ணை உதய்பூர் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், செல்லும் வழியில் காரில் வைத்து அந்த பெண்ணை இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கிடையில், இரவு 10 மணியளவில் அந்த காரை ஒரு சோதனைச் சாவடி அருகே போலீசார் வழக்கமான சோதனைக்காக தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார், காரில் இருந்த 2 இளைஞர்கள் மிதுன் மற்றும் போவர் ஆகிய இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story