காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை - தந்தை கைது

நாகராஜூக்கும், சவுடேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை - தந்தை கைது
Published on

நகரி,

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவை சேர்ந்தவர் வியாபாரி சந்திர சீனு. இவரது மனைவி கங்கா. இவர்களது மகள் சவுடேஸ்வரி (வயது 22). இவர்களது பக்கத்து வீட்டுக்கு நாகராஜ் என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது நாகராஜூக்கும், சவுடேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இந்த காதலுக்கு சவுடேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், அவ ருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அதற்குள் சவுடேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி நாகராஜை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்றும், வீட்டில் இருந்து 25 பவுன் தங்கநகைகளையும் காணவில்லை என்றும் போலீசில் அவரது தந்தை புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுடேஸ்வரியை தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் நாகராஜ், சவுடேஸ்வரியை தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். நான் கட்டிய உடையுடன் காதில் அணிந்திருந்த கம்மலை கூட கழற்றி வைத்துவிட்டு தான் சென்றேன் என்று சவுடேஸ்வரி எவ்வளவோ கூறியும் அவரது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே 5 நாட்கள் தந்தையின் வீட்டில் தங்கிவிட்டு, கணவர் வீட்டுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ள னர். இதன்படி சவுடேஸ்வரி தந்தையுடன் சென்றார். இதற்கி டையே கடந்த மாதம் 19-ந்தேதி சவுடேஸ்வரி வீட்டில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வில்லை. அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அவருடைய தந்தை சந்திரசீனுவிடம் விசாரித்தபோது. தலையணையால் அமுக்கி மகளை கொலை செய்து தற் கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சந்திரசீனுவை கைது செய்தனர்.

தனது மகள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஏழை வாலிபரை காதல் திருமணம் செய்ததால் ஆணவக்கொலை செய்ததாகவும், இதற்கு போலீஸ் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந் ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com