நிர்வாண பூஜைக்கு ஐம்பதாயிரம் சம்பளம்... ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் சில்மிஷம்...போலி சாமியாரிடம் சிக்கிய இளம் பெண்கள்...!

நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி சாமியார் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிர்வாண பூஜைக்கு ஐம்பதாயிரம் சம்பளம்... ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் சில்மிஷம்...போலி சாமியாரிடம் சிக்கிய இளம் பெண்கள்...!
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி சாமியார் நாகேஸ்வரராவ். பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற பல சித்து வேலைகளை செய்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கில் ஈடுபட்டு வந்தார் நாகேஸ்வரராவ். இந்த நிலையில் பூஜை என்ற பெயரில் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட முடிவு செய்தவர் நாகேஸ்வர ராவ், தன்னுடைய நண்பர் நாகேந்திரபாபு என்பவரிடம், ஒரு மணி நேரம் நடைபெறும் நிர்வாண பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்ய இளம் பெண்கள் தேவை. அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் எனக்கு சிறிய அளவில் புதையல் கிடைக்கும் உனக்கும் அதில் பங்கு கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய நாகேந்திர பாபு தன்னுடன் படித்த இளம் பெண் ஒருவரை ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி குண்டூருக்கு வரவழைத்தார். இந்த நிலையில் ஒரு இளம் பெண் உட்பட மேலும் சிலர் அங்கு வந்து சேர்ந்த நிலையில், நாகேஸ்வரராவ், நாகேந்திர பாபு ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களை குண்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்தனர்.

கடந்த ஒன்பதாம் தேதி இரண்டு பெண்களையும் குண்டூர் அருகே பூனக்கல்லு கிராமத்தில் உள்ள போலி சாமியார் நாகேஸ்வரராவின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு நிர்வாண பூஜை மேற்கொண்டனர்.

அப்போது இரண்டு இளம் பெண்களையும் ஒரு அறையில் அடைத்து வைத்த பூசாரி நாகேஷ்வர ராவ் இரண்டு பெண்களையும் நிர்வாணமாக்கி பூஜை என்ற பெயரில் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றதாக தெரியவந்துள்ளது.

இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பூஜை பாதையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மறுநாள் காலை அங்கு வசிக்கும் பொதுமக்கள் நாகேஸ்வரராவை அழைத்து இங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

இதனால் அச்சமடைந்த நாகேஸ்வரராவ் இரண்டு பெண்களையும் அழைத்து கொண்டு சிலக்கலூர் பேட்டையில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 11ஆம் தேதி மீண்டும் நிர்வாண பூஜை நடத்த முயன்றார். அப்போது மீண்டும் அந்த பெண்களிடம் நாகேஸ்வரராவ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தார்.

இதனால் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிய இரண்டு பெண்களும் தங்களுடைய செல்போனில் இருந்த திசா செயலி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த நல்லபாடு போலீசார் இரண்டு பெண்களையும் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இரண்டு பெண்களும் அளித்த தகவலின் அடிப்படையில் போலி சாமியார் நாகேஸ்வரராவ், அவருக்கு உதவிய நாகேந்திர பாபு ஆகியோர் கிட்ட 12 பேரில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை முதலில் கைது செய்த போலீசார் பின்னர் ஏழு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களையும் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com