மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது

மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே இரி பகுதியில் காரில் போதைப்பொருள் கடத்துவதாக உருவா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில் காரில் இருந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், தேரளகட்டே மதானி நகர் பகுதியை சேர்ந்த பராஷ் என்பதும், அவர் காரில் போதைப்பொருள் கடத்தி செல்வதும் தெரியவந்தது.

மேலும் கொட்டாரசவுக்கி, அசோக் நகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 11 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பராசை கைது செய்தனர்.

இதுகுறித்து உருவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com