காதலை ஏற்காத காதலிக்கு பளார் பளார் என அறை வீடியோ

உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் காதலை ஏற்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் அவரை கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
காதலை ஏற்காத காதலிக்கு பளார் பளார் என அறை வீடியோ
Published on

உத்தரப்பிரதேசத்தின் பிலிபிஹி பகுதியில் இளம் பெண் ஒருவர், தன் சக தோழியிடம் இரு சக்கர வாகனத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணிடம் முதலில் பேசுகிறார். அதன் பின் திடீரென்று அப்பெண்ணை கண்மூடித்தனமாக பளார் பளார் என அடிக்கிறார்.

இதில் அப்பெண் வலி தாங்காமல் அந்த இடத்திலே அழுகிறார். பின்னர் அதே வாலிபர் அந்த பெண்ணை கெஞ்சி கூத்தாடுகிறார்

இச்சம்பவம் அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த இளைஞன் தன்னுடைய காதலை ஏற்காத காரணத்தினாலே அப்பெண்ணை அடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com