காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் அடித்து கொலை - பெண் வீட்டார் வெறிச்செயல்

கோப்புப்படம்
பெண்ணை தான் காதலிப்பதாகவும், பெண் கேட்டு யாரும் வர வேண்டாம் எனவும் வாலிபர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ரேசப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் எதிருகட்ல சதீஷ் (29 வயது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வர பெண் வீட்டார் சதீசை அழைத்து கண்டித்து உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
இதனால் அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும், பெண் கேட்டு யாரும் வர வேண்டாம் எனவும் சதீஷ் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். அவரது இந்த செயல் பெண் வீட்டாருக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை அடித்தே கொன்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






