ஒரே வீட்டில் 4 பேரை கொன்று வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

மத்தியபிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர், தனது தாய், மனைவி, மகள் மற்றும் மகன் ஆகிய 4 பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே வீட்டில் 4 பேர் கொலை.
Published on: 

போபால்,

மத்தியபிரதேசத்தில் ஒரே வீட்டில் 4 பேரை கொன்று வாலிபர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வீட்டில் 4 பேர் கொலை

மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள மாலிகேடியை சேர்ந்தவர் நரேந்திர சாஹு (வயது 35). இவர் தனது தாயார் சரஸ்வதி(50), மனைவி சோமலதா(29), மகள் கீர்த்தி(10) மற்றும் மகன் குஷ்(6) ஆகிய 4 பேரையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார்.

ரெயில் முன்பு குதித்து தற்கொலை; போலீசார் விசாரணை

பின்னர் அவர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்துக்கு சென்று ஓடும் ரெயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X