போலீசார் கண்டித்ததால் விபரீதம்.. கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை


போலீசார் கண்டித்ததால் விபரீதம்.. கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2025 1:15 PM IST (Updated: 16 Aug 2025 1:16 PM IST)
t-max-icont-min-icon

காதலியை கத்தியால் குத்தி கொன்று விட்டு அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா(வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை அவர் சரமாரியாக குத்தி கொலை செய்தார். ஆனந்த்ராஜும் அதே கத்தியால் தன்னை குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த நந்தகடா போலீசார், அந்த பெண் மற்றும் ஆனந்த்ராஜ் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

இருவருக்கும் திருமணமாகி இருந்தாலும், ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதுபற்றி அறிந்த மஞ்சுளாவின் கணவர் நந்தகடா போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ஆனந்த்ராஜை அழைத்து போலீசார் கண்டித்திருந்தனர்.

இதன்காரணமாக ஆனந்த்ராஜ், தனது கள்ளக்காதலி மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நந்தகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story