மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் உடனடியாக பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்

மத்திய இணை மந்திரி எம்.ஜே. அக்பர் உடனடியாக பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் அவரது வீடு அருகே போராட்டம் நடத்தினர்.
மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் உடனடியாக பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்
Published on

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரியாக பதவி வகிக்கும் எம்.ஜே. அக்பர் அரசியலுக்கு வரும் முன் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கீழ் பணிபுரிந்தபோது எம்.ஜே. அக்பர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 பெண் பத்திரிகையாளர்கள் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தனர்.

அதன்பின்னர் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீடூ ஹேஸ்டேக்கில் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் நேற்று நாடு திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என கூறி சென்று விட்டார்.

அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு இணை மந்திரி அக்பர் மின்னஞ்சலில் தனது பதவி விலகல் கடிதத்தினை அனுப்பினார் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், மத்திய மந்திரியின் வீட்டை நோக்கி இளைஞர் காங்கிரசார் இன்று பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசாரின் தடுப்பினை மீறி செல்ல முயன்ற சில போராட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதீய ஜனதா தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது பெண்களை காப்போம், பெண்களுக்கு கல்வி வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கிய நிலையில், கேள்விக்குரிய நடத்தையை கொண்டவரை பாதுகாப்பது என்பது அனுமதிக்க முடியாதது என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com