கேரள தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் போராட்டம் - போலீஸ் தடியடி

திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்திற்கு எதிரே இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கேரள தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் போராட்டம் - போலீஸ் தடியடி
Published on

திருவனந்தபுரம்,

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் எதிர்க்கட்சிகள் தெடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சியினர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்திற்கு எதிரே இளைஞர் காங்கிரஸ் சார்பில் பேராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றபேது அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தியும் பேராட்டக்காரர்களை கலைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com