காருக்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்

பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ரம்யா, ஊழியராக வேலை செய்து வந்திருக்கிறார்.
காருக்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்
Published on

பெங்களூரு

கர்நாடகாவில் காருக்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர் கார் வெடித்ததில் பலியானார்.

கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் நாகேந்திரா (வயது 30) என்ற வாலிபர், ரம்யா உல்லாஸ் (வயது 23) என்ற பெண்ணை அழைத்து கொண்டு காரில் சென்றார்.

வெடிகுண்டு

துமகூரு அருகே கார் வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை, நாகேந்திரா குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ரம்யா கார் ஓட்டுநரிடம், வெடிகுண்டு உள்ளது என கூறி விட்டு காரில் இருந்து எப்படியோ தப்பி வெளியே குதித்து விட்டார்.

இதனால், ஓட்டுநர் பிரவீன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளியே தப்பினார். ஆனால், காருக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், காரும் வெடித்து சிதறியுள்ளது. கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி நாகேந்திரா பலியானார். கார் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது.

போலீசார் விசாரணை

இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், கார் எப்படி வெடித்தது? வெடிகுண்டு எப்படி வந்தது? என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரம்யா, பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், அவர்கள் இருவரும் பெங்களூரு நகரில் வாடகை காரில் ஏறினர். அங்கோலா நகர் நோக்கி புறப்பட்டனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com