பள்ளி மாணவியை ரெயில் முன் தள்ளி விட்ட இளைஞர்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் தண்டவாளத்தில் தள்ளிவிட்டதில், ரெயில் மோதி 10-ம் வகுப்பு பள்ளி மாணவி கை மற்றும் கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியை ரெயில் முன் தள்ளி விட்ட இளைஞர்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
Published on

பரேலி,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினர். அப்போது ரெயில் ஏறியதில், 2 கால்கள் மற்றும் ஒரு கையை இழந்து சிறுமி படுகாயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com