மேற்கு வங்காள கவர்னருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு...!

மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்காள கவர்னருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு...!
Published on

மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி.ஆனந்த போஸ். இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆனந்த போஸ் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுக்கு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com