நடிகை சாயிரா வாசிமிற்கு விமானத்தில் பாலியல் தொல்லை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

நடிகை சாயிரா வாசிமிற்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
நடிகை சாயிரா வாசிமிற்கு விமானத்தில் பாலியல் தொல்லை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
Published on

மும்பை,

நடிகர் அமீர்கானின் தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.

இதனை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் சாயிரா வாசிம் வெளியிட்டார். கண்ணீர்மல்க பேசி இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், நடிகை சாயிரா வாசிமிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத அந்த விமான பயணி மீது மும்பை சாஹர் போலீசார், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (மானபங்கம்) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விகாஸ் சச்தேவ் என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.

விகாஸ் சச்தேவ் தரப்பில் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மும்பை கோர்ட்டு விவாஸ் சச்தேவிற்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ரூபாய் 25,000 பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com