கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 15 ஆக உயர்வு

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்து உள்ளது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 15 ஆக உயர்வு
Published on

திருவனந்தபுரம்,

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது. ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தினர் என கூறப்படுகிறது.

இந்த ஜிகா வைரசானது 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய ஃபிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு கடந்த 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com