இந்தியாவுக்கு வரும் சோழர் செப்பேடுகள்: பிரதமர் மோடி பெருமிதம்

சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்து வியந்தேன் என பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவுக்கு வரும் சோழர் செப்பேடுகள்: பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி,

சோழர் கால செப்பேடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-

அண்மையில் நெதர்லாந்து சென்றபோது சோழர் கால செப்பேடுகளை காணும் வாய்ப்பு கிடைத்தது.

நெதர்லாந்தில் சோழ மன்னர்களுடன் தொடர்புடைய 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகள் உள்ளன. சோழப்பேரரசின் முழுமையான வரலாறு கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்கிறோம்.

ஆனைமங்கலம் கிராமம் பௌத்த மடாலயத்திற்கு வழங்கப்பட்டதை இது குறிப்பிடுகிறது. மேலும், சோழ வம்சத்தின் சாதனைகளையும் அவை விவரிக்கின்றன

சோழர்களின் கடல் சாம்ராஜ்யம்

சோழர்களின் கடல் சாம்ராஜ்யம் எவ்வளவு வலிமையாக இருந்தது என்பதை காட்டும் வகையில் செப்பேடுகள் இருக்கின்றன.ஆனைமங்கலம் செப்பேடுகளை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஆனைமங்கலம் கிராமம் பௌத்த மடாலயத்திற்கு வழங்கப்பட்டதை இது குறிப்பிடுகிறது. மேலும், சோழ வம்சத்தின் சாதனைகளையும் அவை விவரிக்கின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான சோழர்களின் உறவுகள் குறித்த தகவல்களும் அதில் அடங்கி உள்ளன.

இத்தகைய விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக எங்கள் அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் தகடுகள் குறித்து நாடு முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எனக்குத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன..உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பும் மகிழ்ச்சியும் நிலவுகிறது என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com