

புதுடெல்லி,
லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத்யாதவ் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அமோக வெற்றிபெறும். பீகாரில் மட்டுமல்ல, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்கும். மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜனதா தனது பெரும்பாலான நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும். கர்நாடகம் தவிர்த்து தென்மாநிலங்களிலும் எங்கும் பா.ஜனதா வெற்றிபெறாது.
எனவே பா.ஜனதா கூட்டணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி அமோக வெற்றிபெறும். மத்தியில் அடுத்த அரசை அமைக்கும். பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை நான் தலைமை தாங்கி நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.