

புதுடெல்லி.
நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணங்ள் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.45 முதல் ரூ.240 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், 60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.