

புனே
மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள நவ சேவா துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். இதில், சட்டவிரோத வகையில், பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என ரகசிய தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, துறைமுகத்திற்கு வந்த 132 கன்டெய்னர்களை வருவாய் நுண்ணறிவு துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தான்சானியா, சூடான் மற்றும் கனடா நாடுகளில் இருந்து துவரம் பருப்பு என்ற பெயரில் தண்ணீர் பழம் விதைகள் மற்றும் பிற பொருட்கள் கடத்தி வரப்பட்டு உள்ளன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவற்றில் ரூ.139 கோடி மதிப்பிலான மொத்தம் 3,029 டன் பொருட்கள் இருந்துள்ளன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பொருட்களால் உள்ளூர் விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படும். அவர்களை பாதுகாக்கின்ற நோக்கில் மத்திய அரசு இவற்றை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த சூழலில், இவற்றை கடத்திய நபரை அதிகாரிகள் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.