தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் களம் கண்டாலும், அவர்கள் இந்த பட்டியலுக்குள் கொண்டுவரப்படவில்லை. 27 வி.ஐ.பி. தொகுதிகள் விவரம் வருமாறு:-

கொளத்தூர்

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நிற்கும் 3 முக்கிய கட்சி வேட்பாளர்கள் விவரமும் தரப்பட்டுள்ளது.

தி.மு.க. - மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. - சந்தானகிருஷ்ணன்

த.வெ.க. - வி.எஸ்.பாபு

நா.த.க. - சவுந்திரபாண்டியன் லூடர் சேத்

எடப்பாடி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.

தி.மு.க. - காசி

அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

த.வெ.க. - அருண்குமார்

நா.த.க. - பிரியதர்சினி

பெரம்பூர்

சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - ஆர்.டி.சேகர்

பா.ம.க. - திலகபாமா

த.வெ.க. - ஜோசப் விஜய்

நா.த.க. - வெற்றித்தமிழன்

திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - இனிகோ இருதயராஜ்

அ.தி.மு.க. - க.ராஜசேகரன்

த.வெ.க. - ஜோசப் விஜய்

நா.த.க. - கிருஷ்ணசாமி

காரைக்குடி

காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் - எஸ்.மாங்குடி

அ.ம.மு.க. - தேர்போகி பாண்டி

த.வெ.க. - பிரபு

நா.த.க. - சீமான்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க. - ஆதிராஜாராம்

த.வெ.க. - டி.செல்வம்

நா.த.க. - ஆயிசா பேகம்

போடிநாயக்கனூர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. - வி.டி.நாராயணசாமி

த.வெ.க. - பிரகாஷ்

நா.த.க. - கலையரசு

சாத்தூர்

சாத்தூர் தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - அ.கடற்கரை ராஜ்

பா.ஜ.க. - நயினார் நாகேந்திரன்

த.வெ.க. - அஜித்

நா.த.க. - ஆனந்தராஜா

ஸ்ரீபெரும்புதூர் (தனி)

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை

அ.தி.மு.க. - கே.பழனி

த.வெ.க. - தென்னரசு

நா.த.க. - சிந்து

அவினாசி (தனி)

அவினாசி தொகுதியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - டாக்டர் கோகிலா மணி

பா.ஜ.க. - எல்.முருகன்

த.வெ.க. - கமலி

நா.த.க. - மேனகா

மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - தா.வேலு

பா.ஜ.க. - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

த.வெ.க. - வெங்கட்ரமணன்

நா.த.க. - அருண்

விருத்தாசலம்

விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

தே.மு.தி.க. - பிரேமலதா விஜயகாந்த்

பா.ம.க. - டாக்டர் தமிழரசி ஆதிமூலம்

த.வெ.க. - விஜய்

நா.த.க. - ஆனந்தி

தர்மபுரி

தர்மபுரி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.

தே.மு.தி.க. - வி.இளங்கோவன்

பா.ம.க. - சவுமியா அன்புமணி

த.வெ.க. - சிவன்

நா.த.க. - சாந்தலட்சுமி

காட்பாடி

காட்பாடி தொகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - துரைமுருகன்

அ.தி.மு.க. - வி.ராமு

த.வெ.க. - சுதாகர்

நா.த.க. - திருக்குமரன்

கோவை வடக்கு

கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ.க. அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - செந்தமிழ்செல்வன்

பா.ஜ.க. - வானதி சீனிவாசன்

த.வெ.க. - சம்பத்குமார்

நா.த.க. - நர்மதா

தியாகராய நகர்

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - ராஜா அன்பழகன்

அ.தி.மு.க. - தி.நகர் சத்தியா

த.வெ.க. - புஸ்சி ஆனந்த்

நா.த.க. - அனுஷா விஜயகுமார்

வில்லிவாக்கம்

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார்.

தி.மு.க. - கார்த்திக் மோகன்

அ.தி.மு.க. - விஜயகுமார்

த.வெ.க. - ஆதவ் அர்ஜூனா

நா.த.க. - ரோஷினி

திரு.வி.க நகர் (தனி)

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி போட்டியிடுகிறார்.

தி.மு.க. - கே.எஸ்.ரவிச்சந்திரன்

அ.தி.மு.க. - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

த.வெ.க. - பல்லவி

நா.த.க. - ஜெகதீஷ் சந்தர்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.

கொ.ம.தே.க. - ஈ.ஆர்.ஈஸ்வரன்

அ.தி.மு.க. - ஆர்.சந்திரசேகர்

த.வெ.க. - அருண்ராஜ்

நா.த.க. - ரேவதி

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார்.

ம.நே.ம.க. - ஜவாஹிருல்லா

அ.தி.மு.க. - தங்க.கதிரவன்

த.வெ.க. - சுகுமார்

நா.த.க. - சா.பாத்திமா பர்கானா

சிதம்பரம்

சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.

ம.ஜ.க. - தமிமுன் அன்சாரி

அ.தி.மு.க. - கே.ஏ.பாண்டியன்

த.வெ.க. - பாரி

நா.த.க. - செ.தமிழ்

சிவகங்கை

சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.

முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ்

அ.தி.மு.க. - பி.ஆர்.செந்தில்நாதன்

த.வெ.க. - குழந்தை ராணி நாச்சியார்

நா.த.க. - இந்துஜா ரமேஷ்

பென்னாகரம்

பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. கவுரவ தலைவர் (டாக்டர் ராமதாஸ் அணி) ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரன், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்

பா.ம.க. - பாடி வெ.செல்வம்

த.வெ.க. - கஜேந்திரன்

நா.த.க. - பழனியம்மாள்

மதுரை மத்தி

மதுரை மத்தி தொகுதியில் நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி போட்டியிடுகிறார்.

தி.மு.க. - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

புதிய நீதிக்கட்சி - சுந்தர் சி

த.வெ.க. - முஸ்தபா

நா.த.க. - கா.அப்துல் ஹக்கிம்

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - தங்கப்பாண்டியன்

த.ம.மு.க. - பிரிசில்லா பாண்டியன்

த.வெ.க. - ஜெகதீஸ்வரி

நா.த.க. - கார்த்திக்

விருதுநகர்

விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.

தே.மு.தி.க. - விஜய பிரபாகர்

அ.தி.மு.க. - வி.ஜி.கணேசன்

த.வெ.க. - செல்வம்

நா.த.க. - லட்சுமணன்

ராதாபுரம்

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் மு.அப்பாவு போட்டியிடுகிறார்.

தி.மு.க. - மு.அப்பாவு

பா.ஜ.க. - எஸ்.பி.பாலகிருஷ்ணன்

த.வெ.க. - சதீஷ் கிறிஸ்டோபர்

நா.த.க. - கிரிஜா தாமரைப்பாண்டியன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com